பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!

1

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயரிய விருதை அறிவித்துள்ளார்.

லிஜியன் ஆஃப் மெரிட்:

அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது லிஜியன் ஆஃப் மெரிட் என்னும் விருது தான். இந்த விருது மிகவும் திறமையாக நாட்டை செயல்படுத்துவதற்கு, இரு நாட்டு அமைதியை மேம்படுத்து போன்ற மிக சிறந்த செயல்களை செய்வோர்க்கு வழங்கப்படும். இந்நிலையில் இந்த விருதுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் பெயரை அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா காலங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் உலக நாடுகளுக்கான நல்ல சேவை புரிந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இரு நாட்டு அமைதியை மேம்படுத்த வழிவிட்டுள்ளார் எனவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருக்கலாம்!!

இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்தியா தூதர் தரன்ஜித் சிங் சந்து , அமெரிக்கா அதிபர் டிரம்ப் இடம் இருந்து பெற்றுக் கொண்டார். மேலும், இந்த விருது ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் அதனை பெற்றுக் கொண்டதாகவும் ஓ’பிரையான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. Ohhhh my god…….
    தொற்று அதிகமாக பரவியது இந்தியா மற்றும் அமெரிக்காவில் தான்…….

    இது சரி என்று எனக்கு தோன்றவில்லை…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here