இந்தியா துணை நின்றதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்: அமெரிக்கா உருக்கம்!!!

0

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், கொரோனா தொற்றின் ஆரம்ப நாட்களில், இந்தியா அமெரிக்காவுக்காக செய்த உதவிகளை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது என்று கூறியுள்ளார். மேலும் இப்போது நாங்கள் இந்தியாவுக்காக துணை நிற்போம் என்பதை  உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். இந்த சுற்று பயணத்தின் முதல் நாளில் அமெரிக்காவில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

 

பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார். அப்போது இக்கட்டான காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்திய ஜோ பைடன் நிர்வாகத்துக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அப்போது அமெரிக்க செயலர் ஆண்டனி பிளிங்கன், கொரோனா தொடக்க காலத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா துணை நின்றதை நாங்கள் மறக்கமாட்டோம். இது போன்ற கடினமான சூழலில் அமெரிக்கா எப்போதும் இந்தியாவிற்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here