Monday, June 14, 2021

எங்கே உருவானது கொரோனா??? உடனடியாக கண்டுபிடிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவு.. அமெரிக்க அதிபர் அதிரடி!!!

Must Read

உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா நோய் தொற்று முதன்முதலில் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வைரஸ் உருவானது குறித்து பல்வேறு சர்ச்சைகளும்  எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தன.

 

2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹானில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் உலகில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியது. இந்த வைரஸை சீன ராணுவமும் சுகாதாரத் துறையும் இணைந்து உருவாக்கியதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. மேலும் இந்த கொடிய கொரோனா வைரஸை ஒரு உயிரி ஆயுதமாக்க சீனா 5 ஆண்டுகளுக்கு முன்பே உலக நாடுகளுக்கு பரப்ப விவாதித்ததாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று கண்டுபிடித்து 90 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உளவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை அமெரிக்க உளவுத் துறை இரு வேறு தகவல்களை கூறிவருகின்றனர். எனவே 90 நாட்களுக்குள் இந்த வைரஸின் தோன்றல் குறித்து தீர்க்கமான முடிவை தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி ரு.2000… அமைச்சர் சக்கரபாணி தகவல்!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பும், 2வது தவணையாக ரூ.2,000 யும் வழங்கப்படும் என...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -