இந்தியாவில் மீண்டும் நுழையும் டிக்டாக்?? வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட்!!

0
america banned tik tok
america banned tik tok

சீனா செயலியான டிக்டாக் நிறுவனத்தை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் முயற்சித்து வருகிறது. இந்தியா – சீனா எல்லை பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனா நாட்டின் 55 மொபைல் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் உலகம் முழுவதும் பிரபலமான டிக்டாக் செயலிலும் ஒன்றாகும்.இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப் பரிசீலிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, டிக்டாக் செயலியைத் தடை செய்யவுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது டிக் டாக் செயலியை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் டிக் டாக்கு தடை 

tik tok
tik tok

கடந்த 2017ல் டிக் டாக் செயலியை துவங்கியது பைட் டான்ஸ் நிறுவனம். பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் லி என்ற வீடியோ சேவையை வாங்கியது. அமெரிக்காவின் பேஸ்புக், ஸ்நாப்சாட் இரண்டும் தங்கமியூசிக்கல்ளுக்கு போட்டியாக டிக் டாக் செயலி பார்த்தன. இன்றும் உலக அளவில் டிக் டாக் செயலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சில பிரச்சனைகளால் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது. இதனால் டிக் டாக் பெரும் தோல்வியை சந்தித்தது எனவே டிக் டாக் செயலியை பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட்க்கு விற்க தயாரான நிலையில் அமெரிக்காவிலும் சீனா செயலிக்கு தடை விதிக்க ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார் ட்ரம்ப்.

டிரம்புடன் மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை

microsoft trumph
microsoft trumph

டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்து விட்டதால், பைட் டான்ஸ் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் எந்த உடன்பாடும் செய்யத் தயங்கி வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா நேற்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டிக் டாக் நிறுவனத்தை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தினருக்கு அளித்திருக்கும் செல்போனில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அமெரிக்காவில் டிக் டாக் ஆப் தடை செய்யப்படும் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here