வேப்பங்குச்சியை ஆர்கானிக் டூத் ப்ரஷாக்கி ரூபாய் 1800 க்கு விற்பனை – அமெரிக்க இகாமர்ஸ் நிறுவனம் நூதன செயல்!!

0

அமெரிக்காவைச் சார்ந்த இ காமர்ஸ் நிறுவனம் வேப்பங்குச்சியை ஆர்கானிக் டூத்ப்ரஷ் என்ற பெயரில் 1800 ரூபாய்க்கு விற்று வருகிறது.

நூதன வியாபாரம்:

நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் மிகவும் பழக்கமான மரங்களில் ஒன்று வேம்பு என்று சொல்லப்படும் வேப்பமரம்.  மிகச்சிறந்த மருத்துவ குணங்களையும், பல வித இதர பயன்களையும் தரக்கூடிய இந்த வேப்பமரம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.  இத்தகைய, பலன்களை பெற்ற  வேப்பமரத்தின் காப்புரிமையை பன்னாட்டு நிறுவனம் வாங்கி வைத்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

இந்த நிலையில்,  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விளையும் விளைபொருட்கள்  வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.  சமீபத்தில், இந்திய மதிப்பில் வெறும் 1000 ரூபாய்க்கு வாங்கப்படும் கயிற்று  கட்டில்,  நியூசிலாந்து நாட்டில்  “இந்தியன் வின்டேஜ் பெட்” என்ற பெயரில் சுமார் 41,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.


இதே போல், தற்போது தமிழர்களின் வாழ்வில் நம் அன்றாடம் பல் துலக்க பயன்படுத்தும் வேப்பங்குச்சியை  ஆர்கானிக் டூத்ப்ரஷ் என்ற பெயரில் 1800 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.  இதை அமெரிக்காவில் உள்ள பிரபல இகாமர்ஸ் என்ற  நிறுவனம் இந்த செயலை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் காலங்காலமாக பயன்படுத்தி வரும் பொருட்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவது இந்தியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here