Friday, March 29, 2024

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயலும் சீனா ஹேக்கர்கள் – அமெரிக்கா குற்றச்சாட்டு!!

Must Read

கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயன்றதற்காகவும், பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் உட்பட அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களை ஹேக்கிங் செய்ததற்காக இரண்டு சீன பிரஜைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா குற்றச்சாட்டு:

அமெரிக்கா, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை லி சியாயு, 34, மற்றும் 33 வயதான டாங் ஜியாஜி ஆகியோர் ஹேக்கிங் செய்வதாக உதவி அட்டர்னி ஜெனரல் ஜான் டெமர்ஸ் குற்றம் சாட்டினார்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

US charges 'China government hackers'
US charges ‘China government hackers’

சீனாவில் இருப்பதாக நம்பப்படும் லி மற்றும் டோங் சில சந்தர்ப்பங்களில் “தங்கள் சொந்த லாபத்துக்காகவும், மற்றவற்றில் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சின் நலனுக்காகவும் செயல்பட்டனர்,சைபர் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கும் நாடுகளின் குழுவில், சீனா இப்போது சேர்ந்து உள்ளது” என்று டெமர்ஸ் கூறினார்.

சீனா மறுப்பு:

அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, சீனாவின் இங்கிலாந்து தூதர் லியு சியோமிங், சீனா ஆராய்ச்சி தரவை “ஆதாரமற்றது” என்று மேற்கின் கூற்றுக்களை நிராகரித்தார். அவர் ட்வீட்டரில் “இத்தகைய குற்றச்சாட்டுகள் சீன விஞ்ஞானிகளுக்கும்,அவர்களின் சாதனைகலுக்கும் அவமரியாதை. இத்தகைய ஆதாரமற்ற கூற்றுக்களை உலகம் கடுமையாக எதிர்க்க வேண்டும், நிராகரிக்க வேண்டும். ” என்றார்.

US accuses Chinese hackers of targeting firms making COVID-19 vaccine
US accuses Chinese hackers of targeting firms making COVID-19 vaccine

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய வல்லரசுகளுக்கிடையில் பதட்டம் அதிகரித்து வருகிறது .

யார் இந்த ஹேக்கர்கள்:

ஒரு மின் பொறியியல் கல்லூரியில் வகுப்பு தோழர்களாக இருந்த லி மற்றும் டோங் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக கணினி ஹேக்கிங் ஈடுபட்டுள்ளனர் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் “அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் தனிப்பட்ட அதிருப்தியாளர்கள், மதகுருமார்கள் மற்றும் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும், ஹாங்காங் மற்றும் சீனா உள்ளிட்ட ஜனநாயக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கலின் தகவல்களைத் திருடுகின்றனர்” என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜயின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது யார்? அட்லீயா? வினோத்தா? வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய்.  தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -