ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய பலி – அலறும் அமெரிக்கா.!

0

கொரோனாவால் பல நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக அளவில் பணக்கார நாடாக திகழும் அமெரிக்காவில் தான் இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். நாளுக்கு நாள் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அமெரிக்கா நாடே பீதியில் உள்ளது.

கொரோனா பாதிப்பு

சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 22 லட்சத்து 48 ஆயிரத்து 864 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சத்து 23 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

How bad can coronavirus get in the US? We're about to find out ...

கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 523 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொடிய வைரசுக்க்கு இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா

அதை தொடர்ந்து தற்போது கொரோனா அமெரிக்காவில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் இந்த நோயிக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

अमेरिका में कोरोना वायरस से 21 लोगों ...

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here