கிரிக்கெட் வீரர் தலையை பதம் பார்த்த பந்து…, பவுலரின் வெறிச்செயல்.., மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!

0
கிரிக்கெட் வீரர் தலையை பதம் பார்த்த பந்து..., பவுலரின் வெறிச்செயல்.., மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!

துலீப் கோப்பை தொடரில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஸை நோக்கி மேற்கு மண்டல அணியின் பவுலர் வெறித்தனமாக பந்தை எறிந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

துலீப் கோப்பை

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டல அணிகளும், மத்திய மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கு மண்டல அணி தனது முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதை தொடர்ந்து விளையாடிய மத்திய மண்டல அணி தொடக்கத்திலே தடுமாற ஆரம்பித்தது.

அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர், எதிரணி பவுலர் கஜா வீசிய பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டார். இதனை தொடர்ந்து கஜா மீண்டும் வேகமாக பந்தை வீச அது, வெங்கடேஷ் ஐயரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார். பிறகு உடனடியாக களத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தது. மேலும் பிசியோ நிபுணரும் வெங்கடேஷை பரிசோதித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து, உடனடியாக வெங்கடேஷ் அய்யர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறினர். இதனால் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் மீண்டும் பேட் செய்ய களத்துக்கு வந்தார். இந்நிலையில் அவர் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் மத்திய மண்டல அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here