நாட்டின் தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவனம் – வழக்கு பதிய உத்தரவிட்ட உள்துறை அமைச்சர்!!

0

இந்திய திரு நாட்டின் மூவர்ண தேசிய கொடியை அவமதித்த, வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர், அம்மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசியக்கொடி அவமதிப்பு:

இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய ஆடைகள், டீசர்ட் கள் மற்றும் காலணிகளை தயார் செய்து விற்பனை செய்தன. இந்த நிலையில், இந்த நிறுவனம் நாட்டின் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. நாடெங்கிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அமேசான் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அம்மாநில டிஜிபிக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here