ரூ. 96,700 மதிப்புள்ள ஏசி-யை ரூ.5,900 விற்ற அமேசான்.. எப்படி இந்த தவறு நடந்துச்சுன்னு தெரியுமா??

0
ஆன்லைன் ஷாப்பிங் தலமான அமேசான் 1.8 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி-யை வெறும் ரூ.5,900 க்கு விற்றுள்ளது. ஆனால் இதன் உண்மையான பண மதிப்பு ரூ. 96,700. அமேசான் தளத்தில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக இந்த குழப்பம் நடந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் தற்போது உள்ள கொரோனா சூழலில் பொருட்களை வாங்க ஆன்லைன் தளங்களையே நாடுகின்றன. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் எந்த பொருளை வாங்கினாலும் கேஷ்-பேக், அதிரடி சலுகைகள், கவர்ச்சியான விளம்பரங்கள் என மக்களை கவர்ந்து வருகின்றன.
தற்போது மிக பெரிய ஈ-காமர்ஸ் தளமான அமேசானில் ஒரு குளறுபடி நடந்துள்ளது. அதாவது அமேசானில் 96,700 ரூபாய் மதிப்புள்ள 1.8 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி-யை வெறும் 5,900 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அந்த ஏசிக்கு 39% தள்ளுபடி அளிப்பதற்கு பதிலாக 94% என்று பதிவாகியுள்ளது. இதனால் இதன் விலை 5,900 ரூபாய் என காட்டப்பட்டு பல வாடிக்கையாளர்களுக்கு விற்பனையும் நடந்துள்ளது.

தற்போது மீண்டும் அமேசானில் இந்த தவறு சரி செய்யப்பட்டு 39 சதவீத சலுகையுடன் 59,000 ரூபாய் என விலை பட்டியலிடப்பட்டு உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here