இது என்னடா அமேசானுக்கு வந்த சோதன..ஒரே சமயத்தில் அனைத்து வலைத்தளங்களும் திடீர் செயலிழப்பு!!!

0

அமேசான், தி கார்டியன், சி.என்.என் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ், உள்ளிட்ட முக்கிய சர்வதேச வலைத்தளங்கள் உலகளவில் ஒரே சமயத்தில் செயலிழந்துள்ளன. மேலும் இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கிய வலைத்தளதிலும் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமேசான் தவிர, பிரிட்டனில் செயல்பட்டு வரும் சர்வதேச செய்தி நிறுவனங்களின் இணைய பக்கங்கள் இணைய சேவை பாதிப்பு காரணமாக முடங்கின. மேலும் பிரபல செய்தி நிறுவனங்களாக தி கார்டியன், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்டவை அறியப்பட்டு வருகின்றன. இந்த வலைத்தளங்களும் தற்போது முடங்கியுள்ளன.

இந்நிலையில் பிரிட்டனில் ஏற்பட்ட இணைய சேவை பாதிப்பு காரணமாக செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரிட்டன் அரசின் இணையதள பக்கம் முடங்கின. எனினும் இந்த தொழில்நுட்ப சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனங்களின் இணைய பக்கங்கள் முடங்கியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

இவ்வாறு வலைத்தளங்களின் திடீர் செயல் இழப்பிற்கு காரணம் பல இணையதளங்களின் முதுகெலும்பாகவுள்ள அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட, ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ சேவையைத் தரும் ‘அமேசான் வெப் சர்வீஸ்’ செயலிழந்ததாக  இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here