அமேசான் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ் – என்ன காரணம் தெரியுமா?

0

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் அவர்கள் தற்போது தனது தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார். தற்போது இதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஜெஃப் பெசோஸ்:

ஆன்லைன் சந்தை விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனம் தான் அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் தொடக்க காலத்தில் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது கணினி முதல் காய்கறி வரை விற்பனை செய்து வருகிறது. அந்த அளவிற்கு ஆன்லைன் சந்தையில் அமேசான் நிறுவனம் தனது கால் தடத்தை மிக ஆழமாக பதித்து விட்டது என்றே சொல்லலாம். இந்நிறுவனத்தின் தலைவராக ஜெஃப் பெசோஸ் திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் உலக பணக்காரர் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் இருந்து வருகிறார். 57 வயதான ஜெஃப் பெசோஸ் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு கார் நிறுத்தும் இடத்தில் இருந்து தனது அமேசான் நிறுவனத்தை தொடக்கினார். சிறிய இடத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.

ஐபிஎல் இல் சேரப்போகும் இரு புதிய அணிகள்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #IPL2022 ஹாஷ்டேக்!!

அதற்கு முக்கிய காரணம் யார் என்றால் அது ஜெஃப் பெசோஸ் மட்டுமே. இந்நிலையில் இன்று அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெஃப் பெசோஸ் விலகவுள்ளார். இவருக்கு பின் தலைமை செயல் அதிகாரி பதவியில் அந்நிறுவனத்தின் இணைய சேவை பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஆண்டி ஜெசி பதவி ஏற்கவுள்ளார். மேலும் ஜெஃப் பெசோஸ் விண்வெளி நிறுவனத்தில் கவனம் செலுத்த முடிவு செய்ததால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here