அமலா பால், ஏ.எல்.விஜய் பிரிந்ததற்கு மொத்த காரணமும் தனுஷ் தானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் விஜயை எதற்காக விவாகரத்து செய்து கொண்டார் என பல நாட்களாக புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில் அதற்கான முழு காரணமும் தனுஷ் தான் என்ற விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

அமலா பால் ஆரம்பித்த முதல் படமே சர்ச்சையில் தான் முடிந்தது. ஆனாலும் தொடர் முயற்சியால் மைனா படத்தின் வாய்ப்பை பெற்று தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அமலா. தமிழில் மட்டும்மல்ல, தெலுங்கு, மலையாளம் என தெந்தியாவையே கலக்கி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்கள் மத்தியில் அவருக்கென்று தனி வரவேற்பு கிடைத்தது. வேட்டை, விஐபி போன்ற படங்களில் பட்டையை கிளப்பி இருப்பார். அதன் பிறகு தலைவா படத்தில் விஜய் உடன் நடிக்கவும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த படத்தின் இயக்குனரான ஏ.எல்.விஜயை திருமணம் செய்துக்கொண்டார் அமலா.

காதலிக்கும் வரை நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் உறவு திருமணத்திற்கு பிறகு விரிசல் விழ ஆரம்பித்து விட்டது. ஒரே வருடத்தில் இருவரும் பிரிந்தனர். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேட்டும் புரியாத புதிராகவே இருந்தது. ஆனால் தற்போது இது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா பட இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

அதாவது காதலிக்கும் போதே ஏ.எல்.விஜய் அமலா பாலிடம் சொல்லி விட்டாராம். அதாவது கல்யாணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று கூறியிருக்கிறார். இதற்கு ஒத்துக்கொண்டு தான் அமலா பால் திருமணமும் செய்துள்ளார். ஆனால் அவரின் நட்பு வட்டாரங்களால் அமலா பாலிற்கு நடிப்பின் மீது ஆசை வந்துள்ளதால் அதனை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதில் குறுக்கே வந்தவர் தான் தனுஷ். இந்த சண்டையை காரணம் காட்டி அடிக்கடி அமலா பாலை வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இது ஏ.எல்.விஜய்க்கு பிடிக்காமல் போகவே தனுஷிடமும் பேச கூடாது என்று கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான அமலா பால் விவாகரத்து செய்துள்ளார். அதாவது தனுஷ் அமலாவிற்கு நிறைய உதவிகள் செய்துள்ளாராம். விஐபி2 படத்தையே அமலா பாலிற்காக தான் எடுத்தாராம். அப்படிப்பட்டவரின் நட்பை எப்படி முறிக்க முடியும். இது தான் அமலாவிற்கும், ஏ.எல்.விஜய்க்கும் விவாகரத்து ஏற்பட்டதற்கான காரணமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here