சரக்கு பாட்டிலுடன் அலப்பறையாக போஸ் கொடுத்த அமலா பால் – காட்டுத்தீ போல பரவும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது லாக்டவுன் தளர்வினால் பல இடங்களில் சுற்றித் திரிகிறார். இந்நிலையில் கோவா சென்றிருக்கும் அமலா பால் சரக்கு பாட்டில் உடன் தெனாவட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் சிந்து சமவெளி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அமலா பால். முதல் படமே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தடை செய்ய கோரி பலரும் போரட்டத்தில் கூட ஈடுபட்டனர். முதல் படமே இப்படி ஆகிவிட்டது என்று இருந்தால் அடுத்த படம் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேக்கப் போடாமல் இயற்கையான அவரது அழகு பலரையும் கவர்ந்தது. குறுகிய காலத்திலேயே பல படங்களில் கமிட் ஆனார். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ‘ தெய்வத்திருமகள்’ போன்ற படங்கள் இவருக்கு செம ஹிட் கொடுத்தது.

amalapaul
amalapaul

ரசிகர்களும் இவருக்கு அதிகமானார்கள். பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜயை காதலித்தும் வந்தார் அமலா பால். ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட ஏ.எல்.விஜய் அமலா பால் போன்ற ஒருவர் தனக்கு கிடைத்தது என் பாக்கியம் என்றும் கூறியிருந்தார். அடுத்த அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா போல வருவார்கள் என்று பார்த்தல் ஒரு வருடத்திலேயே இவர்களின் திருமணம் விவகாரத்தில் முடிவடைந்தது.

இந்த விவகாரத்தில் அமலா பாலிற்கு செட்டில் மென்ட் அளிப்பதாக விஜய் கூறியபோது கூட அவரது அன்பே எனக்கு இல்லை என்று ஆகிவிட்டது. பணத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன் என்று உருக்கமாக பேசியிருந்தார். அதன் பின் விஜய் வேறு திருமணமும் செய்து கொண்டார். இதன் பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கினார் என்றே சொல்லலாம்.

முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். மேலும் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததை அடுத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். இந்நிலையில் தற்போது தனது நட்பு வட்டாரங்களுடன் கோவா சென்றிருக்கும் அமலா பால் சரக்கு பாட்டில் உடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here