அமலா பால் பட ப்ரோமோஷனுக்காக வெளியிட்ட புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!!

0
amala paul

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் சில காலமாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் ‘பிட்ட காதலு’ படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா பால். எப்பொழுதுமே கேரள பெண்களுக்கு தமிழ் திரையுலகில் தனி மவுசு இருக்கும். நஸ்ரியா முதல் நயன்தாரா வரை தமிழ் திரையுலகை கலக்கி கொண்டிருப்பவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் தான்.

அதில் ஒருவர் தான் அமலா பால். அவர் நடித்த முதல் படம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து பல படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்து அசத்தியது. குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்தது.

இது ஒருபுறம் இருக்க காதல் வாழ்க்கை என அனைத்தும் மறுபுறமும் இவருக்கு நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. இவருக்கு ஏ.எல்.விஜய் உடன் திருமணமும் முடிந்தது. ஆனால் சில மாதங்களிலேயே விவகாரத்தில் முடிந்தது. இதனால் திரையுலகை சேர்ந்த பலரும் அதிர்ச்சியாகினர்.

இவர்கள் பிரிந்ததற்கு காரணம் பற்றி பல வதந்திகள் இணையத்தில் பரவியது. மேலும் ஏ.எல்.விஜய் அமலா பாலிற்கு நஷ்ட ஈடு தருவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அமலா பால் தனக்கு அவரது அன்பே கிடைக்கவில்லை, பணம் மட்டும் எதற்கு என்று கூறி விட்டார்.

அதன் பிறகு தனது சுதந்திர வானில் பறக்க ஆரம்பித்தார் அமலா பால். பல சவால்கள் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் பல விசித்திரமான கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிடவும் ஆரம்பித்தார். சமீபத்தில் அவர் ஒரு புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களாக தெலுங்கில் அவர் நடிக்கும் ‘பிட்ட காதலு’ திரைப்படத்தில் நடித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தில் பெயர் மீரா.

தனக்கு அது மிகவும் வலிமை தந்த பாத்திரம் என்றும் தனக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை இந்த மீரா கதாபாத்திரம் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அமலா பால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here