சஞ்சீவ், ஆல்யாவோட குழந்தையா இது?? எப்படி வளந்துட்டாங்க பாருங்களே!!

0

சின்னத்திரை நடிகை ஆல்யா மானஸா தனது குழந்தை ஐலாவுடன் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஆல்யா மானஸா

சின்னத்திரை தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. விஜய் டிவியின் தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் ரீச் ஆன காலத்தில் ஒளிபரப்பான தொடர் தான் ‘ராஜா ராணி’. வெள்ளித்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானஸா இருவரும் ‘ராஜா ராணி’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடரில் கார்த்திக்காக சஞ்சீவும், செம்பாவாக மனஸாவும் நடித்துள்ளனர். இந்த ஜோடிக்கு தமிழ்நாட்டில் பல ரசிகர்கள் உருவானார்கள். சிறந்த ரீல் ஜோடியான சஞ்சீவ் – ஆல்யா மானஸா இருவரும் படப்பிடிப்பின் போது காதலித்து திருமணமும் செய்து கொண்டார்கள்.

‘தாலி கட்டிக்க போறேன்’ – பாரதியுடன் கூத்தடிக்கும் வெண்பா! வைரலாகும் வீடியோ!!

 

ராஜா ராணி சீரியல் முடிவுற்ற நிலையில் ஆல்யா மானஸாவுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை போலவே பேசி சிரிக்கும் ஆல்யா மானஸாவுக்கு ஒரு குழந்தையா என ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர். இந்த ஜோடி பிரிந்து தற்போது வெவ்வேறு தொடர்களில் நடித்து வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தை ஐலாவுடன் மானஸா கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் குழந்தை ஐலாவுடன் ஆல்யா மானஸா எடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here