நவம்பர் 14 ல் அனைத்து பள்ளிகளுக்கு இது கட்டாயம்.., தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை!!

0
நவம்பர் 14 ல் அனைத்து பள்ளிகளுக்கு இது கட்டாயம்.., தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை!!
நவம்பர் 14 ல் அனைத்து பள்ளிகளுக்கு இது கட்டாயம்.., தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வருகிற 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாட இருக்கும் நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டுள்ளது.

உறுதிமொழி:

தமிழகத்தில் தீபாவளி விடுமுறையை தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் எப்பொழுதும் போல் செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்க இருக்கும் அரையாண்டு தேர்வுக்காக அனைத்து மாணவர்களும் தங்களை தயார் செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் களமிறங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு .,, முதல்வரின் உத்தரவு!!

இதனால் மாணவர்களுக்கு படிப்பில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், அதை ஈடுகட்டும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் வழக்கம் போல் பள்ளி இயங்கும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்நிலையில் வருகிற 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாட இருக்கும் நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது தற்போதைய சமூகத்தில் அதிக பாதுகாப்பு தேவைப்படும் மாணவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த உறுதிமொழியை அனைத்து தொடக்க பள்ளியில் இருந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் வரை காலை பிரேயர் கூட்டத்தில் சமூகம் முன்னேற்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here