சமீப காலமாக யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். அதுவும் கேமரா இல்லாத பகுதிகளில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது என்று கருத்து கணிப்பு சொல்கிறது. எனவே வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம், வீடுகளில், திருட்டு, உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாக தடுக்க முடியும். மேலும் நீண்ட நாட்கள் வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து செல்ல வேண்டும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இதை யாரும் செய்வதில்லை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். அதன் பின்னர் வீட்டில் ஏதாவது காணாமல் போனால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கின்றனர். இது மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடக்க கூடாது என்பதற்காகவும், திருடிய ஆட்களை பிடிக்க வசதியாக இருப்பதற்காகவும் எல்லா வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதோடு நில்லாமல், அவை முறையாக இயங்குகிறதா? என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்…, உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு தான் என்ன??