ஆலியா மானசா கூட நட்சத்திர பட்டாளமே நடிக்குதா? அதுல மெயினே இவங்கதான்! லீக்கான அப்டேட்!!

0
ஆலியா மானசா கூட நட்சத்திர பட்டாளமே நடிக்குதா? அதுல மெயினே இவங்கதான்! லீக்கான அப்டேட்!!
ஆலியா மானசா கூட நட்சத்திர பட்டாளமே நடிக்குதா? அதுல மெயினே இவங்கதான்! லீக்கான அப்டேட்!!

ஆலியா மானசா நடிக்க இருக்கும் இனியா என்ற புதிய சீரியலில், நடிக்க உள்ள நட்சத்திர பட்டாளங்கள் குறித்த தகவல், இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல்:

சன் டிவியில், ஆலியா மானசா நடிப்பில் உருவாகும் இனியா என்ற புதிய சீரியல் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த நிலையில், இந்த சீரியல் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விஜே ரிஷி இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவரது, உடன்பிறப்புகளாக ஈரமான ரோஜாவே நடிகர் தீபக் மற்றும் காற்றுக்கு என்ன வேலி சீரியல் நடிகை ப்ரீத்தா போன்றோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடிக்கும் ராஜா மற்றும் நடிகை பிரவீனா போன்றோர் ரிஷி குடும்பத்தில் ஒருவராக நடிக்க உள்ளனர். இதே போல் ஆலியா மானசா குடும்ப உறுப்பினர்களாக சித்தி 2 சீரியல் நடிகை உமா, பிரபல வில்லன் நடிகர் சந்தான பாரதி போன்றோர் இவரது அம்மா அப்பாவாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி மெயின் ரோலில் ஆலியாவின் கணவர் சஞ்சீவ் நடிக்க உள்ளதாகவும், அவரது என்ட்ரி சீரியலில் லேட்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here