ஆலியா மானசாவுக்கு ஜோடியாகும் சஞ்சீவ்., லீக்கான அப்டேட்! அப்போ கயல் சீரியல் அவ்வளவுதானா?

0
ஆலியா மானசாவுக்கு ஜோடியாகும் சஞ்சீவ்., லீக்கான அப்டேட்! அப்போ கயல் சீரியல் அவ்வளவுதானா?
ஆலியா மானசாவுக்கு ஜோடியாகும் சஞ்சீவ்., லீக்கான அப்டேட்! அப்போ கயல் சீரியல் அவ்வளவுதானா?

சன் டிவியில் ஆலியா மானசா நடிக்கும் புது சீரியல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக, அவரது கணவர் சஞ்சீவ் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

அப்டேட் லீக் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நடித்து, பெரிய அளவில் ரீச் ஆனவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இந்த சீரியலை தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐலா மற்றும் அர்ஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், பிரசவத்திற்காக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய ஆலியா மானசா, கொஞ்ச நாட்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது இவர் சன் டிவியில் விரைவில் துவங்க உள்ள இனியா என்ற புதிய சீரியலில் நடிக்க உள்ளார். இதற்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இவருக்கு ஜோடியாக, இவரின் கணவர் சஞ்சீவ் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மனைவியுடன் இவர் புது சீரியலில் நடிக்க இருப்பதால் கயல் சீரியல் கதி என்ன ஆகும் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில், 2 சீரியலிலும் நடிப்பாரா? அல்லது கயல் சீரியலில் இருந்து விலகுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here