ரசிகர்களிடம் கர்ப்பமானதை அறிவித்த ஆலியா பட் – மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!!

0
ரசிகர்களிடம் கர்ப்பமானதை அறிவித்த ஆலியா பட் - மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, ரன்பீர் கபூர் ஆலியா பட் தம்பதி அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் செய்தி புகைப்படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமான நடிகை:

பாலிவுட் திரையுலகில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா பட். இந்த படத்தை அடுத்து, ஹைவே, கல்லி பாய், கங்குபாய் காத்தியா வாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

எளிமையாக திருமணம் செய்யும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் - இவ்ளோ அவசரத்துக்கு காரணம் இதுதான்!!

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இருவரும் தங்கள் உறவினர்கள் முன்னிலையில், மும்பையில் உள்ள கபூரின் வீட்டில் அதிரடியாக  திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது, ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில், ஆலியா பட் மற்றும் ரன்பீர் இருவரும் இணைந்து மானிட்டரில் குழந்தையின் புகைப்படத்தை பார்க்கின்றனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here