அச்சோ., எங்க கண்ணே பட்றும் போல?? வைரலாகும் விஜய் டிவி பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியலின் மூலமாக பிரபலம் அடைந்தவர் தான், நடிகை ஆலியா மானசா. இவரின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகை ஆலியா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் மூலமாக தான் பலரும் பிரபலம் அடைந்து வருகின்றனர். அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பாக மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தான் “ராஜா ராணி” இந்த சீரியலில் தான் முதன் முதலாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே காதல் காட்சிகள் இடம் பெற்றன. இதில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் தான் நடித்தனர்.

இதுவரையிலும் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்காத புதிய முயற்சி – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

ஆலியா மானசாவிற்கு இதுவே முதல் சீரியல் ஆகும். அவரது நடிப்பின் காரணமாக இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இப்படியாக இருக்க சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலில் விழுந்தனர்.

ஆனால், ஆலியா மானசா வீட்டில் அவரது பெற்றோர்கள் அவரது திருமணத்தினை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு தான் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இப்படியாக இருக்க ஆலியா மானசாவின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

அதிலும் கூட ஆலியா மானசா மிகவும் கியூட்டாக இருக்கிறார். அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here