சீறிப்பாய்ந்த காளைகள் சிம்மசொப்பனமாக பிடித்த வீரர் ரஞ்சித் – பரிசு மழை

  0
  30
  Alanganallur Jallikattu

  உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று (ஜனவரி 17) சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் 16 காளைகளை அடக்கி அலங்காநல்லூரை சேர்ந்த வீரர் ரஞ்சித் குமார் முதல் பரிசினைத் தட்டிச் சென்றார்.

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மொத்தம் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகள் தாக்கியதில் 36 பேர் காயமடைந்தனர். காளை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

  டாப் 3 காளைகள்

  1. மாறநாடு குளமங்கலம் காளை
  2. புதுக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ அனுராதாவின் காளை
  3. ஜி.ஆர். கார்த்திக் அவர்களின் காளை

  டாப் 3 வீரர்கள்

  1. அலங்காநல்லூர் ரஞ்சித் குமார் (16 காளைகள்)
  2. அழகர்கோவில் கார்த்திக் (14 காளைகள்)
  3. அரிட்டாபட்டி கணேசன் (13 காளைகள்)

  முதலிடம் பிடித்த வீரருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக முதலமைச்சர் அவர்களின் கையால் வழங்கப்பட உள்ளது. முதலிடம் பிடித்த ரஞ்சித் குமார் சென்ற ஆண்டு 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ராம் குமார் அவர்களின் சகோதரர் ஆவார். மேலும் இவர் கடைசி சுற்றில் மற்றும் கலந்து கொண்டு 16 காளைகளை அடக்கி ஒரே சுற்றில் அதிக காளைகளை அடக்கிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here