2வது புது படத்தில் கமிட்டான பாரதி கண்ணம்மா அகிலன் – அப்போ சீரியல் அவ்வளவு தானா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அகிலன் மற்றொரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு தம்பியாக நடித்து வருபவர் தான் அகிலன். இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினியும் நெருங்கிய நண்பர்களாம். பாரதி கண்ணம்மாவில் அகிலனை அறிமுகப்படுத்தியதே ரோஷினி தான்.

இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். அஞ்சலியை காதலித்து வந்த அகிலன் அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். அஞ்சலி தன்னை ஏமாற்றுகிறாள் என்று தெரியாமல் காதல் போதையில் சுற்றி திரிந்தார்.

அதன் பிறகு அகிலன் மொத்தமாக அஞ்சலியை விட்டு விலக அகிலனின் உண்மையான காதல் புரிந்து அவருடன் வாழ ஆரம்பித்தார். தனக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்த கண்ணம்மா அண்ணிக்காக தன் அண்ணனையும் எதிர்க்க ஆரம்பித்தார். அதனால் தான் அகிலனை அனைவர்க்கும் பிடித்து போனது.

இந்நிலையில் அவரின் நடிப்பு கிடைத்த அங்கீகாரமாய் விஷாலின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது வெள்ளித்திரையில் கால் பாதிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இன்னோரு வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. அதாவது பிட்ஸா 3 படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஷாலின் 31 வது திரைப்படம், பிட்ஸா என நடித்து வரும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்வாரா?? அல்லது விலகுவாரா?/ என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here