என்னால இந்த மாதிரியெல்லாம் நடிக்க முடியாது –  விக்னேஷ் சிவனுக்கு எண்ட் கார்டு போட்ட அஜித்!!

0
என்னால இந்த மாதிரியெல்லாம் நடிக்க முடியாது -  விக்னேஷ் சிவனுக்கு எண்ட் கார்டு போட்ட அஜித்!!
என்னால இந்த மாதிரியெல்லாம் நடிக்க முடியாது -  விக்னேஷ் சிவனுக்கு எண்ட் கார்டு போட்ட அஜித்!!

நடிகர் அஜித் அடுத்து நடிக்கவுள்ள ‘ஏகே 62’ படத்தின் ஸ்கிரிப்டை விக்னேஷ் சிவன், தயாரித்து கொடுத்த போது, அதை படித்த பார்த்த அஜித் அதில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் அறிவுரை :

அஜித் தற்போது, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் 3வது முறையாக AK61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின், ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவனின் AK 62 என்ற படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்டை, விக்னேஷ் சிவன் தயார் செய்து அண்மையில் அஜித்திடம் கொடுத்தார். இதைப் படித்து பார்த்த அஜித், பல அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதெல்லாம் நமக்கு செட்டாகாது என கறாராக கூறியுள்ளார். மேலும், கதையில் சில மாற்றங்களை செய்து வரும் படியும் விக்னேஷ் சிவனிடம் சொல்லியுள்ளதாக பேசப்படுகிறது. விரைவில், இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here