ஏகே 62 படத்திற்கு பேச்சுவார்த்தை நடத்திய விக்னேஷ் சிவன்.., Final முடிவு இது தானா?

0

நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏகே 62:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது. மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின்னர் விக்கி கதை லைக்காவுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குனரிடம் கொடுக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகின. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை இரண்டு தரப்பிலும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

உடல் நல குறைவால் உயிரிழந்த இயக்குநர் கே.விஸ்வநாத்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

அதாவது ஏகே 62 படத்தை குறித்து லைக்கா நிறுவனத்திடம் பேச விக்னேஷ் சிவன் லண்டனுக்கு சென்றார். தற்போது பேச்சுவார்த்தை முடிந்து இந்தியாவுக்கு திருப்பியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் GOOD BYE லண்டன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டை வைத்து பார்க்கும் பொழுது கூடிய விரைவில் ஏகே 62 படத்தை குறித்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here