கடைசியில் AK62 இயக்கப்போவது இவர் தானா?? அப்போ கண்டிப்பா தரமான சம்பவம் இருக்கு!!

0

அஜித் நடித்த “துணிவு” பட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் AK 62 அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறியிருந்த நிலையில் இவர் கூறிய கதைக்களம் அஜித் மற்றும் லைகா நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து AK 62 இயக்குனர் “பில்லா ரீமேக்” விஷ்ணுவர்தனா? மகிழ் திருமேனியா? என கேள்வி எழுந்து வந்தது. தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக விஷ்ணுவர்தன் சல்மான் கானை வைத்து ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க போவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தடையற தாக்க, தடம் போன்ற த்ரில் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் என ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

ஆனால் “இவர் 2 வருடங்களுக்கு மேலாக படத்தை இயக்குவார், ஒரு காட்சி எடுக்க பலமுறை டேக் போவார்” என்றும் ஒரு தரப்பினர் குறை கூறி வருகின்றனர். இருந்தாலும் படம் தரமாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இதையடுத்து முக்கிய அப்டேட் இந்த வார இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் வெய்டிங்க்லே வெறியாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here