தளபதி 67 க்கு டப் கொடுக்கும் AK 62 அப்டேட்.,பாட்ஷா ரீமேக்கில் நடிக்க அஜித்துக்கு பச்சைக்கொடி காட்டிய சூப்பர் ஸ்டார்!!

0
தளபதி 67 க்கு டப் கொடுக்கும் AK 62 அப்டேட்.,பாட்ஷா ரீமேக்கில் நடிக்க அஜித்துக்கு பச்சைக்கொடி காட்டிய சூப்பர் ஸ்டார்!!
தளபதி 67 க்கு டப் கொடுக்கும் AK 62 அப்டேட்.,பாட்ஷா ரீமேக்கில் நடிக்க அஜித்துக்கு பச்சைக்கொடி காட்டிய சூப்பர் ஸ்டார்!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக விஜய் மற்றும் அஜித் திரைப்பட விமர்சனங்கள் பெருமளவில் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக “தளபதி 67” படத்தின் அப்டேட்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால், நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்றளவும் வெளியாகவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா ரீமேக் படம் லைகா தயாரிப்பில் உருவாக உள்ளதாகவும், அஜித் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் இயக்குனர் ஹெச்.வினோத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ரஜினிகாந்த் கூறியதன் பேரில் நடிகர் அஜித் பில்லா ரீமேக் படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி போகலைன்னா? என் நிலைமை இதுதான்! உண்மைகளை உடைத்த டைட்டில் வின்னர் ஸ்ருதிஹா!!

இதையடுத்து பாட்ஷா ரீமேக் படத்திற்கு நடிகர் ரஜினி பச்சை கொடி காட்டி உள்ளதாக தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பில்லா படத்தை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் ஏகே 62 பாட்ஷா ரீமேக் படத்தையும் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here