AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி யார் தெரியுமா?? அப்டேட்டை கேட்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ak 61. தற்போது இந்த படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

AK61 நியூ அப்டேட்:

நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். வலிமை படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்பொழுது இந்த காம்போ மூன்றாவது முறையாக இணையவுள்ளது. அதாவது இந்த எச்.வினோத் மற்றும் போனிகபூர் காம்போவில் AK 61 படம் உருவாகவுள்ளது.

அஜித்தின் 61 வது படத்தில் பாலிவுட் நடிகை தபு வை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .மேலும் போனி கபூரின் படம் என்றாலே பாலிவுட் ஹீரோயினை தான் இறக்குவார் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று. நடிகை வித்யா பாலன் முதல் முறையாக தமிழில் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு வலிமை திரைப்படத்தில் காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அது போலவே தற்போதும் AK 61 படத்திலும் பாலிவுட் நடிகை தபூ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை தபூ ஏற்கனவே நடிகர் அஜித்குமாருடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அதை கேள்வி பட்ட ரசிகர்கள் இந்த ஜோடி எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here