வலிமை ரிலீஸ் தேதி தள்ளி போனதற்கான காரணம் – மனம் திறந்த இயக்குனர்!!

0
வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் - குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

தீபாவளிக்கு திரைக்கு வர இருந்த வலிமை திரைப்படம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து இயக்குனர் எச்.வினோத் தற்போது பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெகு காலமாக ரிலீஸ்க்கு காத்து இருக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தில் அஜித் உடன் சேர்ந்து கார்த்திகேயா, ஹிமா குரேஷி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார்.போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி இந்த படத்திலும் இணைந்துள்ளது. இந்த படத்தை கடந்த தீபாவளியில் ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இதன் வெளியிட்டு தேதி தள்ளி போனது.

தற்போது அதற்கான காரணம் பற்றி வினோத் பேசியுள்ளார். அதாவது அந்த சமயம் ரஜினியின் அண்ணாத்த படம் வெளிவர இருந்தது. முன்னணி நடிகர்கள் போட்டி போட வேண்டாம் என்ற எண்ணத்தில் ரிலீஸ் செய்ய வில்லை என்றும், மேலும் அஜித்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. எனவே இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் தியேட்டர் கிடைக்காது எனவும்,ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தினாலேயே படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியுள்ளார். தற்போது இப்படம் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here