தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தியை அறிவித்த படக்குழு – ஃபரஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது தெரியுமா??

0

தமிழ் சினிமாவை தன் வசத்தில் வைத்திருக்கும் முக்கிய நடிகரான தல அஜித்தின் வலிமை படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக வலம் வரும் தளபதி விஜயின் பிறந்த நாளில் படக்குழு ஃபரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அமர்களப்படுத்தியது. இதனால் தளபதி ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வலிமை படத்தை பற்றிய எந்த தகவலும் ரசிகர்களுக்கு வந்த பாடில்லை. கடந்த ஆண்டு நடந்த கிரிக்கெட் மேட்ச்சில் கூட தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு பெரிய கட்டவுட் எல்லாம் அடித்தனர்.

சமீபத்தில் ஆரம்பித்த விஜய் 65 படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் ஏன் வலிமை படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது என்றும் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புதிய செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தை தயாரிக்கும் போனி கபூர் இந்த மாத இறுதியில் தமிழகத்திற்கு வரவுள்ளாராம். அப்பொழுது இந்த படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடலாம் என்றும் கூறியுள்ளாராம். இதனை கேட்ட பின்பு தான் தல ரசிகர்கள் ஆறுதலடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here