AK61 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்? ஒரே ஆண்டில் கிடைத்த டபுள் ட்ரீட்! குஷியில் ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும், AK61 படத்தின் ரிலீஸ் குறித்த அதிரடி அப்டேட் ஒன்றை, தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் அறிவிப்பு:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் கூட்டணியில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின், படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், AK61 குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

அதாவது, வலிமை திரைப்படத்தைப் போல் அல்லாமல், AK61 படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, ஒரே ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் ட்ரீட் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here