“அஜித் சாரோட இந்த படத்துக்கு நான் கேரண்டி” – இயக்குனர் விக்னேஷ் சிவன் உறுதி! ரசிகர்கள் நிம்மதி!!

0
"அஜித் சாரோட இந்த படத்துக்கு நான் கேரண்டி" - இயக்குனர் விக்னேஷ் சிவன் உறுதி! ரசிகர்கள் நிம்மதி!!

நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில், இந்த படத்தில் தனது 100% உழைப்பை போடுவேன் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் உறுதி:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான, விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து, நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய முக்கிய பிரபலங்களை வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை இயக்கினார். இந்த படம், அண்மையில் வெளியாகி தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அஜித்தின் 62 வது படத்தை எடுக்க விக்னேஷ் சிவன் கமிட்டானார். தற்போது, AK 62 குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதாவது, காத்துவாக்குல 2 காதல் படத்தை போல் அல்லாமல், அஜித் படத்தை பெரிய அளவில் எடுக்க வேண்டும் என்றும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்வேன் என்றும் பேசியுள்ளார். மேலும், தனது முழு உழைப்பையும் போட்டு இந்த படத்தை எடுப்பேன் என இயக்குனர் கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here