Saturday, May 15, 2021

அஜித்தால் அவரது ரசிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – போலீசில் வழக்கு பதிவு!!

Must Read

கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக நடிகர் அஜித் சென்றுள்ளார். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் அஜித் மீதுள்ள ஆர்வத்தினால் அவரை வீடியோ எடுத்துள்ளார். தற்போது இதனால் அவர் பல பிரச்சைனைகளை சந்தித்து வருகிறார்.

தல அஜித்:

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக திகழ்கிறார் அஜித். இவர் மற்றும் இவரை பற்றிய செய்திகள் வெளிவருவதே அபூர்வம் என்றே சொல்லலாம். இவர் கடைசியாக தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவிற்காக வந்திருந்தார். அப்போது இவரது ரசிகர் ஒருவர் செல்பீ எடுக்க முயன்ற போது பெரும் பிரச்சனையே கிளம்பியது. முதலில் அஜித் போனை பிடிங்கி வைத்து கடைசியாக மாஸ்க் போடுமாறு அறிவுறுத்தி செல்போனை அவரிடம் கொடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதேபோல் ஓர் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனைக்கு நடிகர் அஜித் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அஜித்தின் தீவிர ரசிகையான பர்ஜானா அஜித்தை வீடியோ எடுத்துள்ளார். பர்ஜானா அந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் ஒருங்கிணைப்பாளராக சுமார் ஐந்து ஆண்டு காலமாக பணிபுரிந்து வந்தார். பர்ஜானா வீடியோ எடுத்ததை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் செல்போனை பிடிங்கினர்.

ராஜா ராணி 2 – நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அர்ச்சனா! சந்தியாவின் நிலை என்ன?

பின்பு அவரிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த வீடியோ வெளியானது. இதனால் சிலர் அஜித்துக்கு கொரோனா தொற்று என்று கூறி அந்த வீடியோவை பரப்பி வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பர்ஜானவை மருத்துவமனை பணியில் இருந்து விலக்கினர். இந்நிலையில் அஜித் மனைவி ஷாலினியின் வேண்டுகோளுக்கு இணங்க பர்ஜானா மீண்டும் மருத்துவமனை பணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு போதிய வேலையை வழங்காமல் மீண்டும் பணியில் இருந்து நீக்கினர். அதுமட்டுமல்லாமல் லோன் பிரச்சனைகளை கூறி அவரது படிப்பு சான்றிதழ்களை கொடுக்க தொடர்ந்து இழுபறி செய்து வந்தனர். இந்நிலையில் பணிக்கு செல்ல முடியாத பர்ஜானா வேலை இல்லாமல் தனது வயதான பெற்றோர்களை கவனிக்க முடியாமல் திணறி வந்தார். இந்நிலையில் அஜித்தை சந்தித்து நடந்ததை விளக்க நினைத்த பர்ஜானா அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் மகனா இது?? அப்படியே தாத்தாவை உரிச்சு வச்சு இருக்காரு பாருங்களே! வைரலாகும் புகைப்படம்!!

முதலில் சுரேஷ் அஜித்திடம் நிவாரணம் வாங்கி தருவதாக கூறினார். பின்பு அதனை மறுத்துவிட்டார். இதனால் மனம் நொந்த பர்ஜானா தற்கொலை முயற்சியை செய்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் மீது ஏமாற்றுதல் ,நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா தொற்று எதிரொலி – மே 31ம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக திரை உலகினரின் நலன் கருதி தற்போது வருகிற மே மாதம் 31ம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -