அடேங்கப்பா!! இரட்டை சதம் அடித்து தடாலடி காட்டிய ரஹானே.., இந்திய அணிக்கு திரும்புவாரா??

0
அடேங்கப்பா!! இரட்டை சதம் அடித்து தடாலடி காட்டிய ரஹானே.., இந்திய அணிக்கு திரும்புவாரா??
அடேங்கப்பா!! இரட்டை சதம் அடித்து தடாலடி காட்டிய ரஹானே.., இந்திய அணிக்கு திரும்புவாரா??

துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரஹானே இரட்டை சதம் விளாசி அசத்தியதன் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை துலிப் கோப்பை!!

ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை தொடருக்கு பிறகு இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடரான துலிப் கோப்பை சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற வட கிழக்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டலம் விளையாடியது. இதில் இந்திய வீரரான ரஹானே மேற்கு மண்டல அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். 3 வது வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் ரஹானே தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனது பழைய ஆட்டத்தை நேர்த்தியான ஷாட்கள் மூலம் ஆடிய ரஹானே 264 பந்துகளை எதிர்கொண்டு 207 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் 18 பவுண்டரிகளும், ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். ரஹானே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி வந்தார். கடைசியாக ஜனவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ரஹானே இந்திய அணியில் விளையாடவில்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு துலிப் கோப்பையில் ரஹானே விளையாடியதன் மூலம் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். மேலும் இன்றைய ஆட்டத்தில் முச்சதம் விளாச வாய்ப்பு இருக்கிறது. இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வங்கதேசத்துக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here