மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி.., சென்னையில் அடுத்தடுத்து இடிக்கப்படும் மேம்பாலம்.., அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!!!

0

நாட்டில் பெருகி வரும் வாகன வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல்களால் அனுதினமும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் பொது போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ பணி 2ம் கட்டத்தை எட்டியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் 3 வழித்தடங்களில் தண்டவாளங்கள் அமைக்க 112.72 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 82% நிலம் கையகப்படுத்தியுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முதல் வழித்தடமான மாதவரம் to சிறுசேரி சிப்காட் மெட்ரோ பணிக்கு அடையாறு மேம்பாலம் அண்மையில் இடிக்கப்பட்டது.

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை., 3 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்! எந்தப் பகுதியில் தெரியுமா?

இதைத்தொடர்ந்து தற்போது அஜந்தா மேம்பாலமும் இடிக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு இடிக்கப்படும் பாலங்களுக்கு அருகே மாற்று பாலம் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ளனர். இத்திட்டப்பணிகள் 2026க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here