ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தால் நடிகையின் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்.., எவளோ பெரிய வேலையை பார்த்துருக்காங்க!!

0
தனுஷ் பிரிந்த பிறகு ஒரு முடிவோடு புது பாதையை தேர்ந்தெடுத்த ஐஸ்வர்யா - ஊக்குவிக்கும் ரசிகர்கள்!

தேவயானியின் தம்பி நகுல், தனது அக்காவின் கணவரான இயக்குனர் ராஜகுமாருடன் பேசாமல் ஒதுங்கி இருப்பதற்கு ஐஸ்வர்யா & சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் காரணம் என்று நியூஸ் வெளியாகி வருகிறது.

வைரலாகும் நியூஸ்!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சூரியவம்சம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த போது அதில் இணை இயக்குனராக பணிபுரிந்த ராஜகுமாரை காதலித்து வந்தார். ராஜ்குமார்- தேவயானி காதலுக்கு இரு தரப்பினர் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேவயானி வீட்டை விட்டு வெளியேறி, இயக்குனர் ராஜகுமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஓடி போய் திருமணம் செய்த தேவயானி ராஜகுமாரை , அவரது குடும்பம் தற்போது வரை ஏற்று கொள்ளவில்லை. திருமணத்திற்கு பிறகு கூட இன்னும் குடும்பத்தினர் அவர்களை ஒதுக்கி தான் வைத்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் ராஜகுமாரனிடம் சரியாக பேசுவது இல்லையாம்.

பல நஷ்டங்களுக்கு பிறகும் சூரிக்கு அடித்த லாட்டரி.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

அண்மையில் இயக்குனர் ராஜகுமாரன் ஒரு பேட்டி ஒன்றில், இதுகுறித்து பேசியுள்ளார். லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியில் தான் நகுல் படித்ததாகவும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய தோழிகள் என்றும் தேவயானி திருமணத்தின் போது அவர்கள் நகுலை அதிகமாக கிண்டல் செய்திருக்க கூடும். நகுல் சிறிய பையன் என்பதால் அதை பெரும் அவமானமாக நினைத்து இன்னும் என்னிடம் பேசாமல் இருக்கிறார் என்று ராஜகுமாரன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here