ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்.., பணிப்பெண் தொடங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்.., பணிப்பெண் தொடங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்.., பணிப்பெண் தொடங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சூப்பர் ஸ்டாரின் மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு போன வழக்கில் அவர் வீட்டில் வேலை பார்த்த சாந்தி என்ற பெண்ணையும் , கார் டிரைவராக வேலை பார்த்த வெங்கடேசன் என்பவரையும் காவல்துறை கைது செய்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அவர்களை கைது செய்தது மட்டுமின்றி சாந்தி குடும்பத்தினர் அனைவரின் வங்கி கணக்குளையும் முடக்கின. இதனால் சாந்தி குடும்பத்தினர் இக்கட்டான சூழ்நிலையில் அவதிப்பட்டு வருவதால், வங்கி கணக்கை முடக்கப்பட்டதை விடுவிக்கக் கோரி அந்த பணிப்பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர்களுடைய முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தேனாம்பேட்டை போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐயோ.., தனம் அண்ணிக்கு கேன்சரா?? நிலைகுலைந்து போன கதிர்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அதிரடி திருப்பம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here