சின்னத்திரைகளில் கலக்கப்போவது யாரு நிகழச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியான தர்மதுரை, ரம்மி, காக்கா முட்டை போன்ற படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ட்ரைவர் ஜமுனா படம் வெளியான நிலையில் தி கிரேட் இந்தியன் கிட்சேன்,பர்ஹான போன்ற படங்கள் ரீலிஸ்க்கு வெயிட்டிங்கில் உள்ளது .
ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.., மீண்டும் நேருக்கு நேர் மோதும் அஜித், விஜய் திரைப்படங்கள்!!!
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இவர் “முன்னெல்லாம் நான் யாரேனும் கதை சொல்லமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறான். ஆனால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால் நிறைய கதைகளை கேக்க முடியவில்லை. மேலும் என்னிடம் கதை சொல்ல நிறைய பேர் வெயிட்டிங்ல இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.