நயன்தாராவால் ஹீரோக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை…, முன்னணி நடிகை எடுக்கும் புதிய அவதாரம்!!

0
நயன்தாராவால் ஹீரோக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை..., முன்னணி நடிகை எடுக்கும் புதிய அவதாரம்!!
நயன்தாராவால் ஹீரோக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை..., முன்னணி நடிகை எடுக்கும் புதிய அவதாரம்!!

நீதானா அவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். மேலும் தர்மதுரை, வட சென்னை, காக்கா முட்டை போன்ற இவர் நடித்த அனைத்து படங்களுமே மிகவும் பிரபலமானது. இப்படி பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஐஸ்வர்யா, தற்போது புது ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடிக்க உள்ளாராம். மேலும் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் லவ் கான்சப்ட் போன்ற கதைகளில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் சொன்னது போலவே டிரைவர் ஜமுனா, தீயவர் குலை நடுங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் எடுத்த இந்த முடிவிற்கு ஒரு வகையில் நயன்தாராவும் காரணமாக உள்ளார் என்றே சொல்லலாம்.

இவங்க இல்லைனா, எப்பவோ காணாமல் போய் இருப்பேன் – திடீரென பழசை நினைத்து உருகும் தனுஷ்!!

ஏனென்றால் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கிளாமர், லவ் கான்சப்ட் போன்ற கதைகளில் நயன்தாரா கொடி கட்டி பறந்தார். ஆனால் தற்போது அறம், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்று பெண்கள் திறமையை வெளிப்படுத்த கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது இவரது பாணியை ஐஸ்வர்யா ராஜேஸும் பின் தொடர்கிறார். இதே மாதிரி எல்லா ஹீரோயின்களும் சொன்னால் நடிகர்களின் நிலைமை என்ன தான் ஆகுறது என டைரக்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here