விஜய் பட நடிகருடன் நடித்தவரா நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா? அதுவும் இந்த வெற்றி படத்திலா!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களின் பேராதரவோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா பிரச்சனை தான் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. அதில் வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் ஒரு புதுமுகம் என்று தானே அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் அவர் இதற்கு முன்னாடி ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரை  வாய்ப்பு தேடி வந்தவர்களில் ஒருவர் தான் இந்த ஐஸ்வர்யா என்ற தீபிகா. சினிமா வாய்ப்புக்காக தேடி அலைந்து கொண்டிருந்த இவர் முதலில் மூன் டிவியில் ஒரு தொகுப்பாளினியாக இருந்தார். அதன் பிறகு சன் டிவியின் சந்திரகுமாரி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே.. ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து பாரதி கண்ணம்மா அஞ்சலி!!!

அதுவே அவருக்கு முதல் திரை அறிமுகமாகும். அதன் பிறகு விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நடித்து உள்ளார். மேலும் இவர் சீரியல் மட்டுமல்லாமல் ஒரு படத்தில் நடித்து உள்ளார்.அதாவது பரியேறும் பெருமாள் என்ற மாரி செல்வராஜ் அவர்களின் படத்தில் ஹீரோயினான  கயல் ஆனந்தியின் தோழியாக நடித்து உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் ஹிட் சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல முயற்சிகளுக்கு பிறகு ஐஸ்வர்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அவரின் கனவை நிறைவேற்றி கொண்டார். மேலும் அவரின் தனிப்பட்ட மற்றும் சீரியல் குழு உடன் சேர்ந்து செய்யும் ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான ஒன்றாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here