லால் சலாம் படத்துக்குத்தான் அந்த பேச்சா., சூப்பர் ஸ்டாருக்கு வந்த விமர்சனம்., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!!

0
லால் சலாம் படத்துக்குத்தான் அந்த பேச்சா., சூப்பர் ஸ்டாருக்கு வந்த விமர்சனம்., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!!

கோலிவுட் திரையில் தனுஷ் ஹீரோவாக நடித்த 3 திரைப்படத்தை இயக்கியவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினிகாந்த் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதாவது தனது தந்தையை  சங்கி என அழைக்கின்றனர். ஆனால் அவர் உண்மையிலேயே சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கவே மாட்டார் என கூறியிருந்தார்.

மேலும் அவருக்குள் இருப்பது மத பக்தியைத் தவிர வேறு எதுவும் இல்லை என வெளிப்படையாக கூறியிருந்தார். இதையடுத்து ரஜினியிடம் பேட்டியாளர்கள் சில கருத்துக்களை கேட்டுள்ளனர். அதாவது லால் சலாம் படம் ஓடுவதற்காக தான் தன்னுடைய அப்பா சங்கி கிடையாது என்ற விளக்கத்தை ஐஸ்வர்யா கொடுத்தாரா என கேள்வி எழுப்பினர். இதையடுத்து தான் பேசியதை சர்ச்சைக்கு உள்ளாக்கிய சிலருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதாவது லால் சலாம்  ஓட வேண்டும் என்பதற்காக, தான் நம்பாத ஒரு விஷயத்தை படத்திற்காக நம்ப வேண்டிய அவசியம் அப்பாவுக்கு இல்லை. என கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here