ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு அளித்த இன்ப அதிர்ச்சி – இனி ஜாலியோ ஜாலி!!!

0
ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு அளித்த இன்ப அதிர்ச்சி - இனி ஜாலியோ ஜாலி!!!
ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு அளித்த இன்ப அதிர்ச்சி - இனி ஜாலியோ ஜாலி!!!
முன்னணி தொலைத்தொடர்பு  நிறுவனமான ஏர்டெல், அதன் 5.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு  இலவச ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தம் புது சலுகையை ஏர்டெல் குறைந்த சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இந்த சலுகைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும்.
ஏர்டெல் நிறுவனம் பல அதிரடி சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு சமீப காலமாக வழங்கி  வருகிறது, அதிலும் குறிப்பாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிக குறைந்த விலையில் அசத்தலான பல திட்டங்களை செயல்ப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்த தகவல்களின் படி ஏர்டெல் நிறுவனத்திற்கு மொத்தம் 34 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைக்க பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன.
ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு அளித்த இன்ப அதிர்ச்சி
ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு அளித்த இன்ப அதிர்ச்சி

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஏர்டெல் குறைவாக சம்பளம் பெரும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ரூ .49 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இது 5.5 கோடி கிராம பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளது. இந்ததிட்டத்தின் கீழ் ரூ.38 க்கு வாடிக்கையாளர்கள் பேசிக்கொள்ளலாம். மேலும் 100MB டேட்டா சலுகையும் வழங்கப்படும். ரூ.79 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் வாங்கினால் வாடிக்கையாளர்கள் டாக்டைம் மற்றும் டேட்டா சலுகைகள் இருமடங்காக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here