நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக களை கட்டியது. மக்கள் எல்லா இடங்களிலும் ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் சென்னையில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்கள் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு காற்று மாசுபாடு ஏற்பட்டது.
இதனால் சென்னை மாநகரம் முழுவதும் புகை மூட்டம் அதிக அளவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். இந்த காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற நோய்களும் வரக்கூடும். இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் சில நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.