வந்தது ஏர் கார்.. இனி விமானதுல மட்டும் இல்லங்க.. கார்ல கூட வானத்துல பறக்கலாம்!!!

0

ஸ்லோவேக்கியா நாட்டில் மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பறக்கும் ஏர் காரின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்டீபன் க்ளீன், இவர் ஒரு பேராசிரியர். தற்போது இவர் ஒரு புது வித முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் அடைந்துள்ளார். அதுதான் பறக்கும் கார். இவர் பெட்ரோலில் இயங்கும் நவீன ஏர்-காரை வடிவமைத்துள்ளார். மேலும் அதற்கான சோதனை ஓட்டத்தையும் நடத்தியுள்ளார்.

இந்த ஏர் காரின் உள்ளே BMW இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் இரண்டேகால் நிமிடத்தில் விமானமாக மாறிவிடுமாம். ஒரு சமயத்தில் இந்த  காரில் 2 நபர்கள் மட்டுமே பயணம் செய்யமுடியும். இந்த காரின் சோதனை ஓட்டம் ஸ்லோவாக்கியாவில் உள்ள 2 விமான நிலையங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தில் இந்த கார் மணிக்கு 170 கி.மீ வேகத்தில் பறந்துள்ளது. ஆனால் இந்த மணிக்கு 190 கி.மீ வேகம் வரை பறக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here