பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை – அச்சத்தில் பெற்றோர்கள்!!

0
பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை - அச்சத்தில் பெற்றோர்கள்!!
பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை - அச்சத்தில் பெற்றோர்கள்!!

எய்ம்ஸ் கோவிட் பணிக்குழுவின் தலைவரான நவீத் விக், பள்ளிகளை திறப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசரமாக செயல்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தடுப்பூசி செலுத்தாத தனி நபர்களாகவே கருத வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இதனால் முழு ஊரடங்கு முறையானது நடைமுறைக்கு வந்தது. இந்த முழு ஊரடங்கு காரணத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இவையனைத்தும் மூடப்பட்டிருந்தன. கொரோனா நோய் தொற்றின் முதல் அலையின் தாக்கமானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதல் அலையின் தாக்கம் சற்று குறைந்ததால் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளானது திறக்கப்பட்டது.

பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை - அச்சத்தில் பெற்றோர்கள்!!
பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை – அச்சத்தில் பெற்றோர்கள்!!

இதனை தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கமானது உச்சத்தை தொட்டநிலையில் திறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூடப்பட்டன. தற்போது இந்த இரண்டாவது அலையின் தாக்கமானது குறைந்து வருகின்ற நிலையில் பள்ளிகளை திறப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசானது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது.

பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை - அச்சத்தில் பெற்றோர்கள்!!
பள்ளிகளை திறப்பது குறித்து எய்ம்ஸ் பேராசிரியர்களின் எச்சரிக்கை – அச்சத்தில் பெற்றோர்கள்!!

மேலும் இதில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் மற்றும் எய்ம்ஸ் கோவிட் பணிக்குழுவின் தலைவரான மருத்துவர் நவீத் விக்,”பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்றும் , மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தடுப்பூசி செலுத்தாத தனி நபர்களாகவே கருத வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here