தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிகவுக்கு 13 தொகுதி ஒதுக்க அதிமுக முடிவு!!

0

அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சிக்கு 13 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி பெரிய கூட்டணியுடன் களமிறங்க உள்ளது. அதன்படி அதிமுக கட்சியுடன் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் தாமாக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சி ஏற்கனவே பாஜகவிற்கு 20 மற்றும் பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ஆனால் தேமுதிக கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து சிக்கல் எழுத்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் தேமுதிக கட்சி 40 தொகுதிகள் அதிமுகவிடம் கேட்டுள்ளது. ஆனால் அதனை ஏற்க அதிமுக மறுத்து விட்டது. தற்போது 40ல் இருந்து இறங்கி தேமுதிக கட்சி 23 தொகுதிகளில் வந்து நிற்கிறது. 23 தொகுதிகள் கொடுத்தால் கூட சம்மதம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார். ஆனால் இதனை அதிமுக கட்சி கொடுப்பது போல் தெரியவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!

இன்னும் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்களுக்கு இருக்கும் நிலையில் தொடர்ந்து இவர்களது தொகுதி பங்கீடு இழுபறி ஆகி வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற 19ம் தேதியுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் முடிவாக தேமுதிக கட்சியினருக்கு அதிமுக கட்சி 13 தொகுதிகளை கொடுக்க தயாராக இருப்பது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here