Wednesday, June 23, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா உறுதி – தொடர்ந்து அதிமுகவை குறி வைக்கும் கொரோனா..!

Must Read

அதிமுகவின் கலை இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பா.வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை குறிவைக்கும் கொரோனா..!

corona virus
corona virus

அமைச்சர் கே.பி. அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பம், பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது மனைவி, மகன் ஆகியோர், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூணன் போன்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தளபதியே அசரும் அளவிற்கு நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தளபதி விஜய் பாடலுக்கு சூப்பராக நடனமாடும் விடீயோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -