தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்..,வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்..,வெளியான சூப்பர் அறிவிப்பு!!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்..,வெளியான சூப்பர் அறிவிப்பு!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன் முடிவில் இந்த கூட்டத்தொடர் வருகிற ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கூட்டத்தொடரின் 2 வது நாளான இன்று (மார்ச் 21) விவசாயிகளின் எதிர்பார்ப்பான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில் இயற்கை விவசாயங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் அறிவித்து வருகிறார். அதன்படி இயற்கை விவசாயத்தை சிறப்பாக சிரம் மேற்கொள்பவர்களுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை என அறிவித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான மின்சாரத்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

தனுஷுடன் மீண்டும் இணையும் வெற்றி இயக்குனர்.., இணையத்தில் வெளியான முக்கிய தகவல்!!

அதன்படி 23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இலவச மின்சாரம் வேண்டி ஒடிசா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில் தமிழக விவசாயிகளுக்கு இந்த சலுகை வழங்க பட்டதை எண்ணி பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here