மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அஸ்திவாரம் போட்டாச்சு., வெளிவந்த முக்கிய தகவல்!!!

0
மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அஸ்திவாரம் போட்டாச்சு., வெளிவந்த முக்கிய தகவல்!!!
மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அஸ்திவாரம் போட்டாச்சு., வெளிவந்த முக்கிய தகவல்!!!

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் திருமங்கலம் to ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை சுமார் 31 கி.மீ. தொலைவில் மெட்ரோ ரயில் தடம் அமைக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியதன் மூலம் டெண்டர் விடும் பணி சமீபத்தில் தொடங்கியது. இதனிடையில் இத்திட்டத்திற்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்ததாக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானதால் இதற்கான பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் விரைந்து முடிப்பதற்கான ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை., ஏப்ரல் 2ம் தேதி வரை நீடிக்கும்? வானிலை மையம் தகவல்!!!

இந்நிறுவனத்திற்கு இதற்கான அவசியத்தையும் அவசரத்தையும் மெட்ரோ நிர்வாகம் விளக்கி கூற இன்று சென்னை மெட்ரோ தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படியாக மெட்ரோ திட்ட பணிகள் சூடுபிடித்துள்ளதால் மதுரை வாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here